வாசுதேவநல்லூர் அருகே வாகனம் மோதி நகைக்கடை ஊழியர் பலி
வாசுதேவநல்லூர் அருகே வாகனம் மோதி நகைக்கடை ஊழியர் பலியானார்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நகைக்கடை ஊழியர் பலியானார்.
நகைக்கடை ஊழியர்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஆனந்த் (வயது 28). இவர் சங்கரன்கோவிலில் உள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கலைச்செல்வி (21) என்ற மனைவியும், அதிர்ஷ்டா என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் ஆனந்த் தனது மனைவியின் சொந்த ஊரான மாங்குடியில் நடைபெறும் கோவில் திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர் மனைவி, மகளையும் பெற்றோர் வீட்டில் விட்டு, மோட்டார் சைக்கிளில் ஆனந்த் மட்டும் சுப்பிரமணியபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
வாகனம் மோதி பலி
வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்துவழி பகுதியில் வந்த போது அந்த வழியாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உடனடியாக வாசுதேவநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story