சேலம் மாவட்டத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று


சேலம் மாவட்டத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 14 April 2021 1:40 AM IST (Updated: 14 April 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 2,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 87 பேர், தலைவாசல் பகுதியில் 7 பேர், சங்ககிரியில் 6 பேர், நங்கவள்ளி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், சேலம் ஒன்றியத்தில் 3 பேர், எடப்பாடி, கொளத்தூர், வீரபாண்டி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, மேச்சேரி, ஆரியபாளையம், பனமரத்துப்பட்டி, வாழப்பாடி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
இவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 45 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 12 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய்தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
---------------------

Next Story