தர்மபுரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாவு


தர்மபுரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாவு
x
தினத்தந்தி 14 April 2021 1:40 AM IST (Updated: 14 April 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இறந்தார்.

தர்மபுரி:
தர்மபுரியில் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் கமலக்கண்ணன் (வயது 50). இவர் தர்மபுரியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், மகன், மகளும் உள்ளனர். இவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Next Story