யுகாதி பண்டிகையையொட்டி காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்


யுகாதி பண்டிகையையொட்டி  காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்
x
தினத்தந்தி 14 April 2021 1:41 AM IST (Updated: 14 April 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

யுகாதி பண்டிகையையொட்டி காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

காரிமங்கலம்:
யுகாதி பண்டிகையையொட்டி காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. 
வாரச்சந்தை
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட கால்நடைகள், காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்து கால்நடைகள் மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை வாங்கி செல்வார்கள். 
இந்த நிலையில் காரிமங்கலத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது. யுகாதி பண்டிகையையொட்டி அதிக அளவில் ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று நடைெபற்ற சந்தையில் 2 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. 
விவசாயிகள் மகிழ்ச்சி
இதேபோல் நாட்டு கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. இந்த ஆடுகள், கோழிகளை வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. கடந்த வாரத்தை விட நேற்று ஆடுகள், கோழிகள் அதிக விலைக்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காரிமங்கலம் வாரச்சந்தையில் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.80 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Next Story