சேலம் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலை குளிர்வித்த மழை
சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. கொளுத்தும் வெயிலை குளிர்வித்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. கொளுத்தும் வெயிலை குளிர்வித்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சூறைக்காற்றுடன் மழை
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று சேலத்தில் 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலினால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
மேலும் இரவு நேரங்களில் வெப்ப சலனத்தால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை சேலத்தில் திடீரென்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே இந்த மழை பெய்தது. திடீரென்று பெய்த இந்த மழையால் நேற்று மாலை சேலம் நகரம் சற்று குளிர்ச்சியாக காணப்பட்டது.
மேட்டூரில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கொளுத்தும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் தேவூர் அருகே குள்ளம்பட்டி, பச்சபாலியூர், சென்றாயானூர், மயிலம்பட்டி, ஒடசக்கரை, புள்ளாக்கவுண்டம்பட்டி, நல்லங்கியொட்டாயூர்கல்வடங்கம் செட்டிபட்டி அம்மாபாளையம் சுண்ணாம்புகரட்டூர் காவேரிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி கரும்பு பருத்தி எள் சோளம் உள்ளிட்ட பயிர் வகைகள் சாகுபடி செய்துள்ளனர்,
பற்றாக்குறை
இந்நிலையில் தேவூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது இதனால் பயிர் வகைகள் தண்ணீர் பற்றாக்குறையால் வாடியது இந்நிலையில் தொடந்து 2 நாட்களாக மாலை இரவு நேரத்தில் கன மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Related Tags :
Next Story