தென்காசி மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா


தென்காசி மாவட்டத்தில்  113 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 April 2021 2:15 AM IST (Updated: 14 April 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 8 பேர் உள்பட 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆலங்குளம் பகுதியில் 2 பேர், கடையம் பகுதியில் 25 பேர், கடையநல்லூர் பகுதியில் 6 பேர், கீழப்பாவூர் பகுதியில் 14 பேர், குருவிகுளம் பகுதியில் 5 பேர், சங்கரன்கோவில் பகுதியில் 16 பேர், செங்கோட்டை பகுதியில் 3 பேர், தென்காசி பகுதியில் 32 பேர், வாசுதேவநல்லூர் பகுதியில் 7 பேர், மேலநீலிதநல்லூர் பகுதியில் 2 பேர் அடங்குவர்.

மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 588 பேர் வீடு திரும்பி உள்ளனர். 449 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 162 பேர் இறந்துள்ளனர்.

Next Story