ஆத்தூரில் ரூ.1.10 கோடிக்கு பருத்தி ஏலம்


ஆத்தூரில் ரூ.1.10 கோடிக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 14 April 2021 2:15 AM IST (Updated: 14 April 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் ரூ.1.10 கோடிக்கு பருத்தி ஏலம்

ஆத்தூர்:
ஆத்தூர் புதுப்பேட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இங்கு சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் விளையும் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.5 ஆயிரத்து 19 முதல் ரூ.6 ஆயிரத்து 699 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 800 முதல் ரூ.9 ஆயிரத்து 139 வரையிலும், ஓட்டு  ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரத்து 605 வரை வற்பனை ஆனது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 300 மூட்டை பருத்தி, ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

Next Story