சாரல் மழையினால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு
தாயில்பட்டி பகுதியில் சாரல் மழையினால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தாயில்பட்டி,
தாயில்பட்டி பகுதியில் சாரல் மழையினால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சாரல் மழை
தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, மடத்துப்பட்டி, சல்வார்பட்டி, விஜயகரிசல்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு மழை பெய்தது. தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் பட்டாசு ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தரை முழுமையாக நனைந்ததால் பட்டாசு ஆலைகளில் பட்டாசுகளை காயவைக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
விடுமுறை
பட்டாசுஆலைகள் அதனுடன் இணைந்த உபதொழில் பேப்பர் குழாய் தயாரிப்பது உள்ளிட்ட வேலைகளும் நிறுத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் நேற்று பணி இழந்தனர். கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் காரணமாக மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் நேற்று பெய்த சாரல் மழையினால் வெயிலின் தாக்கம் குறைந்தது. குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story