திருச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது- கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்


திருச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது- கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
x
தினத்தந்தி 14 April 2021 3:08 AM IST (Updated: 14 April 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் ஆலோசனை

கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மருத்துவமனை டீன் வனிதா மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் திவ்யதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தடுப்பூசி இருப்பு

தற்போது ஒரு வாரத்துக்கு தேவையான தடுப்பூசி இருப்பு உள்ளது. இன்னும் 3 நாட்களில் மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக தடுப்பூசி பெறப்படும். தடுப்பூசி போடுவதற்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை. 
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. இதில் 3 இடங்கள் கிராமப்புற பகுதிகளிலும், 11 இடங்கள் நகரப்பகுதியில் உள்ளது. அந்த பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story