செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய உச்சமாக கொரோனா தொற்று ஒரே நாளில் 750-ஐ தாண்டியது


செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய உச்சமாக கொரோனா தொற்று ஒரே நாளில் 750-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 14 April 2021 4:16 AM IST (Updated: 14 April 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய உச்சமாக கொரோனா தொற்று ஒரே நாளில் 750-ஐ தாண்டியது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 771 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 280-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 56 ஆயிரத்து 788 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 849-ஆக உயர்ந்தது. 4 ஆயிரத்து 643 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 204 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 350-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 30 ஆயிரத்து 526 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 468-ஆக உயர்ந்துள்ளது. 1356 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 285 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 48 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46 ஆயிரத்து 151 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1974 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 726 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.

Next Story