இன்று தமிழ் புத்தாண்டையொட்டி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்


இன்று தமிழ் புத்தாண்டையொட்டி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
x
தினத்தந்தி 14 April 2021 4:27 AM IST (Updated: 14 April 2021 4:27 AM IST)
t-max-icont-min-icon

இன்று தமிழ் புத்தாண்டையொட்டி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இன்று (புதன்கிழமை) தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் பிறப்பதையொட்டி கோவிலுக்குள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ரமேஷ் கூறும்போது, ‘இந்து அறநிலையத்துறையின் ஆணைப்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படும். மேலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் கட்டளைதாரர்கள் மூலமாகவோ, தனிநபர்கள் மூலமாகவோ ஏதும் நடைபெறாது. கோவிலுக்குள் நுழைவு வாயிலின் முன்பாகவே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். உள்பிரகாரத்தில் (கர்ப்பகிரகம்) பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தடுப்புக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள தட்டில் விபூதி, குங்குமத்தை பக்தர்களே எடுத்துக் கொண்டு கடவுளை வழிபாடு செய்துவிட்டு செல்லவேண்டும். அர்ச்சனை செய்யவோ மற்றபடி தனிப்பட்ட வழிபாடுகள் செய்யவோ அனுமதி கிடையாது. எனவே பக்தர்கள் மிகவும் கவனத்துடன் சமூக இடைவெளி விட்டு கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றினால் மட்டுமே கோவிலினுள் அனுமதிக்கப்படுவார்கள். கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேல் உள்ள வயதானவர்கள், சிறு குழந்தைகளை தயவுசெய்து கோவிலுக்கு அழைத்து வர வேண்டாம்’ என்றார்.

Next Story