கொரோனா தடுப்பு நடவடிக்கை: நேர கட்டுப்பாட்டால் ஜவுளி வியாபாரம் பாதிப்பு- வியாபாரிகள் கவலை


கொரோனா தடுப்பு நடவடிக்கை: நேர கட்டுப்பாட்டால் ஜவுளி வியாபாரம் பாதிப்பு- வியாபாரிகள் கவலை
x
தினத்தந்தி 14 April 2021 4:28 AM IST (Updated: 14 April 2021 4:28 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால், ஜவுளி வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

ஈரோடு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால், ஜவுளி வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஜவுளிச்சந்தை
ஈரோடு கனி மார்க்கெட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளிச்சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு மற்ற மாவட்டங்களை தவிர வெளிமாநில வியாபாரிகளும் வந்து ஜவுளிகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக வியாபாரம் முடங்கியது. கடந்த 2 மாதங்களாக தேர்தல் காரணமாக நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாகவும் ஜவுளி விற்பனை மந்தமாக காணப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால், மார்க்கெட்டில் அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டதால், வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
கட்டுப்பாடுகள் விதிப்பு
இதுகுறித்து கனி மார்க்கெட் வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஜவுளி விற்பனை குறைந்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால் மொத்த விற்பனை பாதிக்கப்பட்டு இருந்தது. எனவே தேர்தலுக்கு பிறகு வியாபாரம் இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் தேர்தல் நிறைவு பெற்ற உடனே கொரோனா தடுப்பு நடவடிக்கை என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
வழக்கமாக காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை கடைகள் செயல்படும். ஆனால் தற்போது காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற குழப்பம் நிலவி வருவதால், ஜவுளிகளை வாங்க வரும் வெளிமாநில வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. மேலும், முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டால், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் வியாபாரிகள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story