நடிகர் யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்


நடிகர் யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 April 2021 7:18 AM IST (Updated: 14 April 2021 7:18 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

பெரம்பூர், 

தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் பத்திரிகையாளரிடம் பேசும்போது, சமீபத்தில் வெளிவந்த நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த படத்தில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களை கீழ்த்தரமாக சித்தரித்துள்ளனர். எனவே இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்கள் சமூக மக்களை ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story