பள்ளத்தில் விழுந்து மாநகராட்சி ஊழியர் சாவு


பள்ளத்தில் விழுந்து மாநகராட்சி ஊழியர் சாவு
x
தினத்தந்தி 14 April 2021 7:32 AM IST (Updated: 14 April 2021 7:32 AM IST)
t-max-icont-min-icon

மாதவரம் சாமி நகர் அருகே பள்ளத்தில் விழுந்து சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார்.

செங்குன்றம்,

சென்னை அடுத்த மாதவரம் தெலுங்கு காலனியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 26). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர், நேற்று மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது மாதவரம் சாமி நகர் அருகே மழைநீர் சேமிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

இதையறிந்து தீயணைப்பு போலீசார் அங்கு வந்து பள்ளத்தில் கிடந்த அவரை மீட்டபோது இறந்துவிட்டது தெரியவந்தது. மாதவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story