சைக்கிள் மீது வேன் மோதி பள்ளி மாணவி பலி
செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை அருகே சைக்கிள் மீது வேன் மோதியதில் பள்ளி மாணவி பலியானார்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த ஜவஹர்லால் நேரு நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகள் ஷாலினி (வயது 16). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகரில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை அருகே வந்தபோது, அலமாதியில் இருந்து செங்குன்றத்தை நோக்கி வந்த வேன் ஒன்று சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த க ாயம் ஏற்பட்ட ஷாலினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story