செடியில் வீணாகும் தக்காளி
தொடர் விலை வீழ்ச்சியால் தக்காளிப்பழங்களை விவசாயிகள் பறிக்காமல் செடியில் விட்டு விட்டனர். இதனால் தக்காளி பழங்கள் செடிகளில் பழுத்து வீணாகிறது.
பல்லடம்
தொடர் விலை வீழ்ச்சியால் தக்காளிப்பழங்களை விவசாயிகள் பறிக்காமல் செடியில் விட்டு விட்டனர். இதனால் தக்காளி பழங்கள் செடிகளில் பழுத்து வீணாகிறது.
தக்காளி சாகுபடி
பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் தக்காளி, வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. தக்காளி அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. 45 நாள்முதல் 60 நாள் வரை நாள்தோறும் தக்காளி பழங்கள் அறுவடைக்கு கிடைக்கும். ஒரு ஏக்கர் தக்காளி பயிரிட விதை உரம் நடவு கூலி மற்றும் பராமரிப்பு போன்றவற்றிக்கு ரூ. 40 ஆயிரம் செலவாகிறது.
இந்த முறை போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் தக்காளி விளைச்சல் பல்லடம் சுற்றுவட்டாரப்பகுதியில் அதிகரித்துள்ளது. சராசரியான விளைச்சல் இருந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு, தக்காளி கூடுதல் விலைக்கு விற்றது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்காளி வரத்து அதிகரிப்பதால் கடந்த வாரத்தில் 15 கிலோ தக்காளி கொண்ட பெட்டி 400 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, ஒரு பெட்டி 150 ரூபாயாக குறைந்துள்ளது.
விலைவீழ்ச்சி
விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்னர். இந்நிலையில் செடிகளில் இருந்து தக்காளி அறுவடை செய்ய கொடுக்கும் கூலிக்கு கூட விலை கட்டுப்படியாகாது என்ற நிலையில் தக்காளி விவசாயிகள் அறுவடை செய்யாமல் செடிகளிலே விட்டுவிட்டனர். இதனால் பல்லடம் சுற்றுவட்டாரப்பகுதியில் விளைந்த தக்காளி பழங்கள் செடிகளிலே வீணாகி வருகின்றன.
---
செடியில் பழுத்து வீணாகும் தக்காளிகள்.
Related Tags :
Next Story