ஆரணியில் கொரோனாவுக்கு வியாபாரி பலி


ஆரணியில் கொரோனாவுக்கு வியாபாரி பலி
x
தினத்தந்தி 14 April 2021 5:17 PM IST (Updated: 14 April 2021 5:20 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் கொரோனாவுக்கு வியாபாரி பலி.

ஆரணி,

உலக மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. ஆரணி சைதாப்பேட்டை பிச்சாண்டி நகர், விஜயரங்கன் தெருவை சேர்ந்தவர் குட்டி என்ற பிரகாஷ் (வயது41). பஜாரில் மளிகை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று முன்தினம் இரவு இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அனைவருக்கும் கொரனோ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆரணி நகரில் கொரோனா தொற்றால் ஒருவர் இறந்த சம்பவம், ஆரணி சுற்று வட்டார மக்களிடம் அச்சம் நிலவி வருகிறது.


Next Story