தூத்துக்குடி அருகே முயல் வேட்டையாடிய 7 பேர் கைது
தூத்துக்குடி அருகே, முயல் வேட்டையாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே முயல் வேட்டையாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
முயல்வேட்டை
தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்துக்கு உட்பட்ட அடைக்கலாபுரம் மேய்ச்சல் பரப்பில் ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலர் விமல் குமார் தலைமையில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அடைக்கலாபுரத்தை சேர்ந்த 7 பேர் காட்டு முயல்களை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
7 பேர் கைது
உடனடியாக வனத்துறையினர் அந்த 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி 7 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இனிமேல் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுரை வழங்கி அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story