தூத்துக்குடியில் தீயணைப்புத்துறையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி


தூத்துக்குடியில் தீயணைப்புத்துறையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 14 April 2021 6:47 PM IST (Updated: 14 April 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தீயணைப்பு துறையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தீயணைப்பு துறையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தீத்தொண்டு தின நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ்நாட்டில் தீயணைப்புத்துறையில் பணியின் போது உயிர் நீத்தவர்களுக்கு தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமை தாங்கி, அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து, 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பிரசாரம்
மேலும் மாவட்ட அலுவலர் குமார் கூறம்போது, 14.4.2021 முதல் 20.04.2021 வரை ஒரு வார காலம் அனுசரிக்கப்பட உள்ள இத் தீ தொண்டு வாரத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், குடிசைபகுதிகள், மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் வழிபாட்டு தளங்களில் அரசு விதிமுறைக்குட்பட்டு, தீயணைப்பு துறை அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வ தொண்டகளை கொண்டு தீ தடுப்பு குறித்த பிரசாரங்கள், விழிப்புணர்வு குறித்த பிரசுரங்கள் மற்றும் கொரோனா பெருந் தொற்றினை எதிர்கொள்வது குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த பிரச்சாரங்கள் செய்யப்பட உள்ளன’ என்று கூறினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி மாவட்ட அலுவலர் முத்து பாண்டியன், தூத்துக்குடி நிலைய அலுவலர் சகாயராஜ், மற்றும் சிப்காட் நிலைய அலுவலர் முனியசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Next Story