மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல் தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 April 2021 7:08 PM IST (Updated: 14 April 2021 7:08 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல் தொழிலாளி பலி

பெருமாநல்லூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கொண்டையன்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 33. இவர் பெருமாநல்லூர் அருகே காளிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்றுகாலை மோட்டார் சைக்கிளில் அவினாசி சென்றுவிட்டு, மீண்டும் காளிபாளையம் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பெருமாநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, மோட்டார்சைக்கிளின் பின்னால் வந்தவேன், மோடடார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Next Story