கோர்ட்டு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
கோர்ட்டு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஊட்டி
சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட கோர்ட்டு, மகளிர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், வழக்கறிஞர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
சுகாதாரத்துறையினர் வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் முகாமிட்டு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஊழியர்கள், வழக்கறிஞர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தொடர்ந்து 50 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. விடுமுறை நாளில் ஊட்டியில் கோர்ட்டு ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story