தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி


தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 14 April 2021 7:18 PM IST (Updated: 14 April 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

ஊட்டி

நீலகிரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, ஊட்டி தீயணைப்பு நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்ணிஷா பிரியதர்ஷினி பணியின்போது உயிர் நீத்த அலுவலர்கள், வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை தீ ெதாண்டு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. 

இதையொட்டி தீ பாதுகாப்பு சாதனங்களை முறையாக பராமரிப்பதால் தீ விபத்துகளை குறைக்கலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.இதேபோன்று கோத்தகிரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அலுவலர் பிரேமானந்தன் தலைமை தாங்கினார். 

தொடர்ந்து பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, அலுவலர் மோகன் குமார் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story