மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து


மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து
x
தினத்தந்தி 14 April 2021 7:18 PM IST (Updated: 14 April 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து

கோத்தகிரி

கோத்தகிரி கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குவதாக இருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவி வருவதால், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. 

அதன்படி மத விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.இதையொட்டி கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவை ரத்து செய்ய கமிட்டியினர் முடிவு செய்து உள்ளனர். திருவிழா ரத்து செய்யப்பட்டாலும், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. 

பின்னர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக பூஜை நடைபெற்றது. இதில் கமிட்டியினர் மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர்.

Next Story