ஒரே நாளில் 8,483 பேருக்கு கொரோனா பரிசோதனை
ஒரே நாளில் 8483 பேருக்கு கொரோனா பரிசோதனை
கோவை
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நாள்தோறும் 500 பேர் முதல் 600 பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர்.
இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டு உள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கும் தற்போது பரிசோதனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா உச்ச நிலையில் இருந்த போது அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 7 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது புதிய உச்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 8,423 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று 7,604 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதார துறை அதிகாரி கூறியதாவது
வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி
நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு வீட்டில் போதிய வசதி இருந்தால், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி வழங்கி வருகிறோம்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர் தங்க தனியறை, அதனுடன் இணைந்த கழிப்பறை கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதன்படி 168 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இன்று (நேற்று) 7 ஆயிரத்து 604 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 96 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் நேற்று முன்தினம் 14,800 பேருக்கும், நேற்று 4,848 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 24,152 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
----
Reporter : P.VIJAYAN Location : Coimbatore - Coimbatore
Related Tags :
Next Story