வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 14 April 2021 9:36 PM IST (Updated: 14 April 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

மங்கலம்
மங்கலத்தை அடுத்த  சிங்கப்பூர் நகர் பகுதியை சேர்ந்தவர் லதா (வயது 40) இவருக்கு சரண்யா, சங்கீதா என இரண்டு மகள்கள் உள்ளனர். லதா டெய்லராக பணியாற்றி வருகிறார். கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் லதா தனது குடும்பத்தினருடன் கடந்த 7ந்தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் மறுநாள் லதாவின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு, கதவு லேசாக திறந்து கிடப்பதைப் பார்த்த லதாவின் வீட்டருகே வசிப்பவர்கள் லதாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் லதா வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டும் பீரோவில் இருந்த 10 பவுன் மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூ.15ஆயிரம் திருட்டு  போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் ஆகியோர் திருட்டு நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர். இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story