வடமதுரை அருகே 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை


வடமதுரை அருகே 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 April 2021 9:54 PM IST (Updated: 14 April 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 22). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா (20). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். 
இந்தநிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கட்டகாம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சிவசக்தியிடம் கவிதா கேட்டுள்ளார். அதற்கு அவர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கவிதா தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு சேலையால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவிதாவின் தந்தை ஆண்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கவிதாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story