திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரேநாளில் 42 பெண்கள் உள்பட 112 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 726 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று 12 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 690 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story