தினத்தந்தி செய்தி எதிரொலி சாலையில் தேங்கி நின்ற கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது


தினத்தந்தி செய்தி எதிரொலி  சாலையில் தேங்கி நின்ற கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 14 April 2021 10:27 PM IST (Updated: 14 April 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலி சாலையில் தேங்கி நின்ற கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே கனங்கூர் காலனி பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெற்குத் தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாய நிலை இருந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’ யில் செய்தி வெளியானது.

இதையொட்டி தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை உத்தரவின்படி ஊராட்சி செயலாளர் சண்முகம் கனங்கூர் தெற்குத் தெருவில் பொக்லைன் எந்திரம் மூலம் குளம் போல் தேங்கி இருந்த கழிவு நீரை அப்புறப்படு்த்தி சுத்தம் செய்தனர். தொடர்ந்து அங்கிருந்து கழிவு நீர் வெளியேறும் வகையில் தற்காலிகமாக சாலையோரம் சிமெண்ட் குழாய் அமைத்து அதை கழிவு நீர் கால்வாயில் இணைத்தனர். மேலும் தூய்மை காவலர்கள் மூலம் கழிவு நீரை அகற்றிய பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story