குழந்தை இல்லாத ஏக்கத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 April 2021 10:42 PM IST (Updated: 14 April 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை இல்லாத ஏக்கத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெகமம்

குழந்தை இல்லாத ஏக்கத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

3 ஆண்டாக குழந்தை இல்லை 

நெகமம் அருகே உள்ள காரப்பாடியை சேர்ந்தவர் அய்யனேஸ்வரன். இவருடைய மனைவி சர்மிளா (வயது 26). அய்யனேஸ்வரன் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

 இதனால் அவர் தனது மனைவியுடன் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தார். 
இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் சர்மிளாவுக்கு இருந்துள்ளது. 

தூக்குப்போட்டு தற்கொலை 

இந்த நிலையில் சர்மிளா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெகமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் தனக்கு குழந்தை இல்லை என்று உறவினர் களிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் மனவிரக்தி அடைந்த சர்மிளா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த நெகமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

சப்-கலெக்டர் விசாரணை 

இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் சர்மிளாவுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால், அவருடைய சாவு குறித்து பொள்ளாச்சி சப்-கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார். 


Next Story