வாரத்திற்கு 2 நாட்கள் இலவசமாக மது கேட்டு மதுப்பிரியர்கள் வைத்த பதாகையால் பரபரப்பு


வாரத்திற்கு 2 நாட்கள் இலவசமாக மது கேட்டு   மதுப்பிரியர்கள் வைத்த பதாகையால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 April 2021 10:50 PM IST (Updated: 14 April 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

மதுப்பிரியர்கள் வைத்த பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரமங்கலம்:
கீரமங்கலத்தில் இருந்து மேற்பனைக்காடு செல்லும் சாலை எதிரே நேற்று முன்தினம் இரவு ஒரு பதாகை வைத்துள்ளனர். அந்த பதாகையில் ஒரு கவிஞரின் முகநூல் பதிவை பதாகையாக வைத்துள்ளதாக தொடங்கி கடந்த 2002 முதல் 2019 வரை மதுவால் அரசுக்கு கிடைத்துள்ள வருமானம் பற்றிய புள்ளி விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் அடுத்து அமையப் போகும் அரசுக்கு மதுப்பிரியர்கள் கோரிக்கையாக "இப்ப நாங்க எதிர்பார்க்கிறது எங்க அய்ட்டத்தையும், வாரத்தில் 2 நாள்கள் இலவசமாக தந்தீங்கன்னா எங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்" என்று அந்தப்பதாகையை முடித்துள்ளனர் மதுப்பிரியர்கள். இந்தப் பதாகை அந்த வழியாக செல்லும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Next Story