கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 156 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 47 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 486 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 594 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
773 ஆக அதிகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 119 பேர் இறந்துள்ளனர். கடந்த மாதம் இதே நாளில் சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 30-க்கும் குறைவாக இருந்தது. ஒரு மாதத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 773 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story