வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை அமோகம்
வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை அமோகமாக நடந்தது
கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேநிலையில் வெயில் தாக்கத்தால் தாகம் தணியவும், உடல் குளிர்ச்சியாக இருக்கவும், குளிர்பான கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், மதுக்கரை பகுதிகளில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது. தற்போது நுங்கு உற்பத்தி குறைவாக உள்ளதால் இப்பகுதியில் 2 நுங்கு ரூ.10-க்கு விற்பனையாகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.
Related Tags :
Next Story