வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 138 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 138 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
x
தினத்தந்தி 14 April 2021 10:53 PM IST (Updated: 14 April 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 138 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

பொதுஇடங்களில் செல்லும் போது பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அவற்றை கடைப்பிடிக்காதவர்களுக்கு சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் விதமாக முக்கிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அங்கு இருமல், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் சளிமாதிரி பரிசோதனைக்காக சேகரிக்கப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

138 பேருக்கு தொற்று

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 101 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றைய பரிசோதனை முடிவில் மேலும் 138 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 138 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரும் வீடு, விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22 ஆயிரத்து 383 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 ஆயிரத்து 406 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 358 பேர் பலியானார்கள். தற்போது 619 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களின் அரசின் விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story