டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் கொளந்தாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 29). இவர் மூலக்காட்டானூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த டாஸ்மாக் பாருக்கு வந்த 2 பேர் சந்திரசேகரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்து ரூ.500-ஐ பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சந்திரசேகர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், பணம் பறித்த தூளிபட்டியை சேர்ந்த பிரேம் (25), வெள்ளாள பட்டியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story