அரசு அறிவித்தபோதிலும் சித்திரை முதல் நாளில் பூட்டிக்கிடந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள் விழுப்புரம் மாவட்ட மக்கள் ஏமாற்றம்


அரசு அறிவித்தபோதிலும் சித்திரை முதல் நாளில் பூட்டிக்கிடந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள் விழுப்புரம் மாவட்ட மக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 14 April 2021 10:59 PM IST (Updated: 14 April 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

அரசு அறிவித்தபோதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் சித்திரை முதல் நாளில் பூட்டிக்கிடந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தது.

விழுப்புரம், 

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் நேற்று சித்திரை முதல் நாளிலும் அலுவலகம் இயங்கும், என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
ஆனால்   விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம், இணை சார்பதிவாளர் அலுவலகம் எண்-1, விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் எண்-2 மற்றும் மாவட்டத்தின் பிற இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாமல் பூட்டிக்கிடந்தன. 

இதனால் மங்களகரமான நாளான நேற்று பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் சிலர், அலுவலகங்கள் பூட்டிக்கிடந்ததை கண்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சித்திரை முதல் நாளான இன்று (நேற்று) பத்திரப்பதிவுக்கான டோக்கன் வழங்க மென்பொருளில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும். எனவே இந்த ஆண்டு சித்திரை முதல் நாளில் பத்திரப்பதிவு செய்ய இயலாது. 

இந்த ஆண்டு வரும் ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களிலும், அடுத்த ஆண்டு வரக்கூடிய சித்திரை முதல் நாளிலும் பத்திரப்பதிவு செய்யப்படும் என்றனர்.

Next Story