வால்பாறையில் தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு
வால்பாறையில் தீத்தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டது.
வால்பாறை
தீயணைப்பு துறை சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதியை பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறும் வகையில் தீத்தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் படி வால்பாறையில் தீத்தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி வால்பாறையில் உள்ள பொதுமக்களுக்கு தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது, தீ பாதுகாப்பு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
மேலும் வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியர்கள், டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தீ தடுப்பு சாதனங்களை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் அரசு பஸ் டெப்போவில் பயன் படுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த தீத்தடுப்பு உபகரணங் களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் காலாவதியான உபகரணங்களை மாற்ற அறிவுரை வழங்கினார்கள்.
இதில் தீயணைப்பு நிலைய அதிகாரி பிரகாஷ் குமார் தலைமையில் தீயணைப்புத்துறையினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story