கொரோனா தடுப்பு நடவடிக்கை
கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்பேரில் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் மேற்பார்வையில் திருவாடானை வட்டாரப் பகுதிகளில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளபட்டு வருகிறது. மண்டல துணை தாசில்தார் சேதுராமன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் கொண்ட குழுவினர் சி.கே.மங்களம் முதல் கருமொழி வரை உள்ள பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது முகக்கவசம் அணியாத 15 பேரிடம் தலா ரூ.200, கருமொழியில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆட்களை ஏற்றிச் சென்றது தொடர்பாக சரக்கு வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் அருள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமுருகன், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், வருவாய் ஆய்வாளர்கள் மெய்யப்பன், கேசவன், புல்லாணி, அமுதன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொண்டி நகர் பகுதியில் திருவாடானை வட்ட வழங்கல் அலுவலர் அமர்நாத் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story