கொரோனா பரவலை தடுக்க வியாபாரிகள்,பொதுமக்களுக்கு முககவசம்
கொரோனா பரவலை தடுக்க வியாபாரிகள்,பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கொேரானா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. தினசரி 50-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கொேரானா பரவுவதை தடுக்க சிவகங்கை வாரச்சந்தையில் சிவகங்கை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஒமேகா நிறுவனம் இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கையில் நடைபெற்றது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு 2,000 முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானதிரவியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தலைவர் தேசிய விருது பெற்ற பேராசிரியர் கண்ணப்பன், ஒமேகா நிறுவனத்தின் தலைவர் திலகவதி கண்ணன், ஒக்குப்பட்டி ஊராட்சி தலைவர் பழனி ஆறுமுகத்தாள், நேரு யுவ கேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜவகர், பாரதி இசைக்குழு நிறுவனர் யுவராஜ், ஊர்க்காவல் படை ஒருங்கிணைப்பாளர் மாலா, மற்றும் பொறியாளர் கவியரசன், ஓய்வு பெற்ற துைண ேபாலீஸ் சூப்பி ரண்டு லெட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு முக கவசங்களை வழங்கினர்.
Related Tags :
Next Story