4 கிலோ உலோக விநாயகர் சிலை
வேதாரண்யம் அருகே வாய்க்காலில் கிடந்த 4 கிலோ எடையிலான உலோக விநாயகர் சிலை மீன்பிடி வலையில் சிக்கியது.
வேதாரண்யம்;
வேதாரண்யம் அருகே வாய்க்காலில் கிடந்த 4 கிலோ எடையிலான உலோக விநாயகர் சிலை மீன்பிடி வலையில் சிக்கியது.
நர்த்தனவிநாயகர் சிலை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மகாராஜபுரம் கிராமத்தில் முருகானந்தம் என்பவர் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மீன்பிடி வலையில் ஒரு கனமான பொருள் சிக்கியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வலையை மேலே இழுத்து பார்த்தார். அப்போது மீன்பிடி வலையில் சுமார் 4 கிலோ எடையில் 1 அடி உயரத்தில் உலோக விநாயகர் சிலை இருந்தது. நடனமாடும் நிலையில் உள்ள இந்த விநாயகர் சிலை நர்த்தனவிநாயகர் சிலை என தெரியவந்தது.
கோவிலில் திருடப்பட்டதா?
இந்த சிலை கிராம நிர்வாக அலுவலர் சுகந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் இந்த சிலையை வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ரமாதேவி மற்றும் துணை தாசில்தார் ஜெயசீலனிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து நாகை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வந்து பார்த்த பிறகுதான் இது எந்த காலத்தை சேர்ந்த சிலை எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பது தெரியவரும். இந்த சிலை கோவிலில் இருந்து திருடி வரப்பட்டதா? அல்லது வீட்டில் பூஜைக்கு வைத்திருந்த சிலையா என்பதும் தெரியவில்லை. இது குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகே அனைத்து விவரங்களும் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story