மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
வத்திராயிருப்பு அருகே பந்து விளையாடி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே பந்து விளையாடி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மின்சாரம் தாக்கியது
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 42). கூலித்தொழிலாளி. இவருக்கு பிரவீன்குமார் (14) என்ற மகன் இருந்தான். இவன் வீட்டு அருகே நண்பர்களுடன் பந்தை எறிந்து விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது பந்து அருகில் இருந்த போர் மோட்டார் அருகில் விழுந்துள்ளது. மோட்டார் அருகே வயர் கீழே கிடந்துள்ளது. அப்போது அவர் பந்தை எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.
சிறுவன் பலி
இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பிரவீன்குமார் பரிதாபமாக இறந்தார்.
அருகில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்து அவரை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story