1 லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


1 லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 14 April 2021 8:36 PM GMT (Updated: 14 April 2021 8:36 PM GMT)

மாவட்டத்தில் சுகாதாரத்துறை முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 122 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர், 
மாவட்டத்தில் சுகாதாரத்துறை முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 122 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 தடுப்பூசி 
மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
 அதன் அடிப்படையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
விருதுநகர் 
 விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
 அதேபோல் விருதுநகர் வட்டாரத்தில் கன்னிசேரி புதூர், அழகாபுரி, ஆவுடையாபுரம், ஆமத்தூர், செங்குன்றாபுரம், விருதுநகர் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும், நரிக்குடி வட்டாரத்தில் நரிக்குடி, வீரசோழன், ஏ.முக்குளம், கட்டனூர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், திருச்சுழி பகுதியில் எம்.ரெட்டியபட்டி, கல்லூரணி, பரளச்சி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அருப்புக்கோட்டை பகுதியில் பந்தல்குடி, மலைப்பட்டி, பாலவனத்தம், கோபாலபுரம், அருப்புக்கோட்டை நகர ஆரம்ப சுகாதார நிலையத்திலும், சாத்தூர் பகுதியில் உப்பத்தூர், நடுச்சூரங்குடி, நென்மேனி, நல்லி, சாத்தூர் நகர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போடப்படுகிறது.
அதேபோல வெம்பக்கோட்டை பகுதியில் தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், சிவகாசி பகுதியில் எம்.புதுப்பட்டி, நாரணாபுரம், மாரனேரி, எரிச்சநத்தம், வடமலாபுரம், கிருஷ்ணப்பேரி, ஆலமரத்துப்பட்டி, விஸ்வநத்தம், சித்துராஜபுரம், சிவகாசி நகர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது.
 ஸ்ரீவில்லிபுத்தூர்
 ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஆர்.ரெட்டியபட்டி, டி.மானகலிசேரி, மம்சாபுரம், வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ராஜபாளையம் பகுதியில் ஜமீன் கொல்லங்கொண்டான், சொக்கநாதன்புத்தூர், சேத்தூர் கிழவிகுளம், தளவாய்புரம், டி.பி. மில்ஸ் ரோடு, நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. 
வத்திராயிருப்பு பகுதியில் குன்னூர் நத்தம்பட்டி வ. புதுப்பட்டி, கோட்டையூர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி இலவசமாக பொதுமக்களுக்கு போடப்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரி 
 எனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் அட்டை அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அந்தந்த  ஆரம்பசுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 8,968 பேர், முன் களப்பணியாளர்கள் 1387 பேர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட 90,967 பேர் உள்பட  1,13, 122 பேருக்கு கொரோனாதடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு விதிமுறைகளை மாவட்ட மக்கள் முழுமையாக பின்பற்றி நோய் பரவலை தடுக்க உதவிட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story