திருச்சி மாநகரில் முககவசமின்றி சுற்றி திரிந்த 1,174 பேர் மீது வழக்கு ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் அபராதம்


திருச்சி மாநகரில்  முககவசமின்றி சுற்றி திரிந்த 1,174 பேர் மீது வழக்கு ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 15 April 2021 2:42 AM IST (Updated: 15 April 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் முககவசமின்றி சுற்றி திரிந்த 1,174 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, 
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 14 இடங்களில் நேற்று பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு முககவசம் வழங்கப்பட்டது. மேலும், முககவசமின்றி சுற்றி திரிந்த 1,174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதத்தொகை ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் விதிக்கப்பட்டது. இதேபோல் தனிநபர் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.33 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story