திருச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மீண்டும் அதிகரிப்பு
திருச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சார்ஜா, அபுதாபி, மஸ்கட், ஓமன், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமானங்கள் மூலம் வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு தனியார் பரிசோதனை மையங்கள் மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனையை அதிகப்படுத்தும் வகையில் 3 மருத்துவ குழுவினர் விமான நிலைய வளாகத்தில் தற்போது இயங்கி வருகின்றனர். இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை மூலம் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. முகாமில் விமான நிலைய ஊழியர்கள், சுங்கத்துறை அதிகாரிகள், குடியுரிமை பிரிவு அலுவலர்கள் உள்பட 49 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story