தஞ்சை வேளாண்மை கல்லூரி மாணவர்களின் கிராமப்புற விவசாய அனுபவ பணி


தஞ்சை வேளாண்மை கல்லூரி மாணவர்களின் கிராமப்புற விவசாய அனுபவ பணி
x
தினத்தந்தி 15 April 2021 2:42 AM IST (Updated: 15 April 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமப்புற விவசாய அனுபவ பணி மேற்கொண்டுள்ளனர்.

மணிகண்டம், 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தன்ராஜ், விஷ்ணுவியாஸ், விவேக், புவனேஸ்வரன், கிருத்திக்ரோஷன் உள்ளிட்ட 10 மாணவர்கள் கிராமப்புற விவசாய பணி அனுபவத்திற்காக திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி பூங்குடி, நவலூர்குட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் களப்பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் ஜான் என்ற அங்கக விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் குறுவை நெல் நடவுக்காக நாட்டு ரகமான குள்ளகார் நெல் நாற்றுகளை அங்கு நடவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களுடன் மாணவர்களும் சேர்ந்து நடவு செய்தனர். மேலும் அங்கக விவசாய முறையில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது பற்றி மாணவர்கள் கேட்டறிந்தனர். 

Next Story