திம்பம் மலைப்பகுதியில் கடும் வறட்சி: டிரைவர்கள் வீசும் காய்களுக்காக காத்திருக்கும் குரங்குகள்

திம்பம் மலைப்பகுதியில் கடும் வறட்சி: டிரைவர்கள் வீசும் காய்களுக்காக காத்திருக்கும் குரங்குகள்
x
தினத்தந்தி 14 April 2021 9:25 PM GMT (Updated: 14 April 2021 9:25 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் ஏற்றிச்செல்லும் வாகன டிரைவர்கள் வீசும் காய்களுக்காக குரங்குகள் காத்திருக்கின்றன.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் ஏற்றிச்செல்லும் வாகன டிரைவர்கள் வீசும் காய்களுக்காக குரங்குகள் காத்திருக்கின்றன.
கடும் வறட்சி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட திம்பம் மலைப்பகுதியில் ஏராளமான குரங்குகள் வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் மழை பெய்யாததால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போது திம்பம் மலைப்பகுதியில் உள்ள மரங்களில் காய்கள் மற்றும் பழங்கள் ஏதும் இல்லை. இதனால் குரங்குகள் உணவு கிடைக்காமல் திம்பம் மலைப்பாதையில் அலைந்து திரிகின்றன.
காய்கறி வாகனங்கள்
கர்நாடக மாநிலம் மைசூரு, சாம்ராஜ் நகர் மற்றும் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து காய்கறிகள் ஏற்றிச் செல்லும் வேன், லாரி டிரைவர்கள் திம்பம் மலைப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு காய்களை வீசி செல்கிறார்கள். அவைகளை தின்று குரங்குகள் பசியை போக்கிக்கொள்கின்றன.
காய்களை எடுப்பதற்காக ரோட்டில் குறுக்கும் நெடுக்கும் ஓடும்போது குரங்குகள் வாகனங்களில் சிக்கி உயிாிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. எனினும் வறட்சியால் ஏற்பட்ட பசியை போக்க, சாலைகளில் காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வருகின்றனவா? என்று குரங்குகள் காத்திருக்கின்றன. 

Next Story