தமிழ்ப்புத்தாண்டையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.55½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை


தமிழ்ப்புத்தாண்டையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.55½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
x
தினத்தந்தி 15 April 2021 4:29 AM IST (Updated: 15 April 2021 4:29 AM IST)
t-max-icont-min-icon

உழவர் சந்தைகளில் ரூ.55½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

சேலம்:
தமிழ்ப்புத்தாண்டையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.55½ லட்சத்துக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.
தமிழ்ப்புத்தாண்டு
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. மாநகரில் அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேற்று உழவர் சந்தைகளில் காய்கறிகளை விற்க விவசாயிகள் அதிகளவு கொண்டு வந்தனர். இதனை வாங்குவதற்கு பொதுமக்களும் அதிகளவில் வந்தததால் உழவர் சந்தைகளில் கூட்டம் அலைமோதியது.
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் 168 விவசாயிகள் 42 டன் காய்கறிகளும், 7 டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவை ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்து 105-க்கு விற்கப்பட்டது. 9,769 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு 134 விவசாயிகள் 24 டன் காய்கறிகளும், 6 டன் பழங்களும் கொண்டு வந்தனர். இவை ரூ.8 லட்சத்து 63 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. 6,178 பேர் உழவர் சந்தைக்கு வந்திருந்தனர்.
ரூ.55½ லட்சத்துக்கு விற்பனை
அஸ்தம்பட்டி உழவர் சந்தைக்கு 49 விவசாயிகள் 15 டன் காய்கறிகளும், 1 டன் பழங்களும் கொண்டு வந்தனர். இவை ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்து 722-க்கு விற்பனை செய்யப்பட்டன. 3,223 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். அம்மாபேட்டை உழவர் சந்தைக்கு 82 விவசாயிகள் 20 டன் காய்கறிகளும், 2 டன் பழங்களும் கொண்டு வந்தனர். இவை ரூ.5 லட்சத்து 48 ஆயிரத்து 47-க்கு விற்கப்பட்டன. உழவர் சந்தைக்கு 5,063 பேர் வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறும் போது, ‘தமிழ்ப் புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளுக்கு 842 விவசாயிகள் 201 டன் காய்கறிகளும், 28 டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ரூ.55 லட்சத்து 65 ஆயிரத்து 464-க்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானது. உழவர் சந்தைகளுக்கு மட்டும் 50 ஆயிரத்து 854 பேர் வந்து பொருட்களை வாங்கி சென்றனர்' என்றார்.

Next Story