நாமக்கல் மாவட்டத்தில் பெண் தாசில்தார் உள்பட 81 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் பெண் தாசில்தார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 12,659 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பெண் தாசில்தார், அரசு பள்ளி ஆசிரியை மற்றும் அரசு பஸ் டிரைவர் உள்பட 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,740 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 25 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 111 பேர் பலியாகி இருந்த நிலையில், 12,131 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 498 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 17 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story