அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரி டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரி டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை அடுத்த தலக்காஞ்சேரி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில நாட்களாக அரசு அனுமதியோடு சவுடு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த ஏரியில் இருந்து தினந்தோறும் திருவள்ளூர், மணவாளநகர், பூந்தமல்லி, திருவாலங்காடு, பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வாறு செல்லும் லாரிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் தார்ப்பாய் போடாமல் வேகமாக செல்கிறது. இதன் காரணமாக அந்த லாரியின் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இந்த ஏரியில் நிர்ணயித்த அளவை விட அதிக ஆழத்தில் பள்ளம் தோண்டி மணல் அள்ளப்படுகிறது.
எனவே பொதுமக்களுக்கு இடையூறாக அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரி டிரைவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story