பொன்னேரி அருகே மனைவி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தற்கொலை


பொன்னேரி அருகே மனைவி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தற்கொலை
x
தினத்தந்தி 15 April 2021 10:01 AM IST (Updated: 15 April 2021 10:01 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே மனைவி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.

பொன்னேரி, 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பிரவீன்குமார் (வயது 24). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு பழவேற்காடு தோணிரவு கிராமத்தை சேர்ந்த சிவரஞ்சனி (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் திருப்பாலைவனம் கிராமத்தில் தனிக்குடித்தனமாக வசித்து வந்தனர். கணவர், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதி சிவரஞ்சனியை தலையணையால் அமுக்கி கொலை செய்த வழக்கில் பிரவீன்குமார் கைது செய்யப்பட்டார்.

ஜாமீனில் வந்த பிரவீன்குமார் தன்னுடைய தாய், தந்தையுடன் தங்கியிருந்தார். மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story