வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
வேலூர்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களில் இல்லாத அளவிற்கு தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வேலூர் மாவட்டத்திலும் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று 138 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய பரிசோதனையின் முடிவில் மேலும் 152 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில், 15 பேர் வேலூரில் சிகிச்சை பெற வந்த வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். வேலூர் மாநகராட்சி பகுதியில் 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
152 பேரும் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story